talaivar
Tuesday, November 3, 2009
பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளான நவம்பர் 27ல் இப்புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் இரத்த உறவுகளையும் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரான்சில் இவ்வாண்டும் வழமைபோல் நடைபெறவுள்ளது.
தன் தாய் திருநாட்டின் சுதந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும் உயிர்நீத்த வீரர்களையும், அவர்களை பெற்றெடுத்தவர்களையும் மதிப்பளிப்பதென்பது தமிழர்களால் மரபு வழியாக செய்யப்பட்டு வரும் மரியாதைக்குரிய நிகழ்வாகும்.
தமிழீழ தேசத்தின் விடுதலைக்காக தம்இன்னுயிரை ஈந்த மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளான நவம்பர் 27ல் இப்புனிதர்களை பெற்றெடுத்த பெற்றோர்களையும், அவர்களின் இரத்த உறவுகளையும் ஆண்டு தோறும் மதிப்பளித்து வருகின்றோம்.
கடந்த ஆண்டுகளைப் போன்று இவ்வாண்டும் மாவீரர்களின் பெற்றோர்களையும், இரத்த உறவுகளையும் மதிப்பளிப்பதற்கு இதுவரை எம்முடன் பதிவில் உள்ளவர்களும், இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்களும் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள நேரடியாக எமது அலுவலகத்துடனோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க அதிகாரிகளால்,ஏற்கனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்
இந்த வருடம் ஐ.நா. சபை அமர்வுக்காக இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச சென்றிருந்த வேளை, அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள், அவரை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது:-
இந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள்,அமர்வுக்காக சென்றிருந்த இலங்கைக் குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் உள்ளடங்கியிருந்தார். இந்தநிலையில்,அமெரிக்காவுக்கு சென்ற பின்னர் அமரிக்க குடிவரவு அதிகாரிகள் கோத்தபாயவை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணை செய்துள்ளனர். எனினும், இந்த விடயம் அந்த வேளையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்ய அமெரிக்காவுக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச,
வெளிநாட்டு சக்திகள், இலங்கையின் இராணுவ வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்

கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்களிடம் ஆயுதங்களை களைவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம்

[ புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:24.44 AM GMT +05:30 ]
கிழக்கில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு மீண்டுமொரு தடவை பொதுமன்னிப்பை அறிவித்து மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்க பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்பிரகாரம் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஆயுதக் குழுக்களுக்கு படைத்தரப்பினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அதில் ஒர் சிறியளவே இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றின் தலைவரான கஜூ சமட் என்பவர் ஆயுதங்களை கையளித்து சில தினங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Subscribe to:
Posts (Atom)