கிழக்கு மாகாண ஆயுதக் குழுக்களிடம் ஆயுதங்களை களைவதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம்
[ புதன்கிழமை, 04 நவம்பர் 2009, 04:24.44 AM GMT +05:30 ]
கிழக்கில் இயங்கி வரும் ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு மீண்டுமொரு தடவை பொதுமன்னிப்பை அறிவித்து மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்க பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்பிரகாரம் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் ஆயுதங்களை ஒப்படைக்குமாறு ஆயுதக் குழுக்களுக்கு படைத்தரப்பினரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருந்தொகையான ஆயுதங்கள் காணப்படுவதாகவும், அதில் ஒர் சிறியளவே இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, முஸ்லிம் ஆயுதக் குழுவொன்றின் தலைவரான கஜூ சமட் என்பவர் ஆயுதங்களை கையளித்து சில தினங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
talaivar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment